ADDED : நவ 07, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, குமாரப்பாளையம், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் செல்வகுமார், 32. இவர் நேற்று (நவ.,6) காலை தனது மனைவியின் ஸ்கூட்டரை (பி.ஒய் 05 வி.எச்.0784) வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் உள்ளே சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் திடீரென ஸ்கூட்டரை திருடி சென்றார்.
இதைகண்ட செல்வகுமார் சத்தம் போட்டபடி வெளியே ஓடிவந்து, மற்றொரு பைக் மூலம் ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை பின்தொடர்ந்து சென்றார். ஆனால், அந்த மர்மநபர் ஸ்கூட்டருடன் மாயமானார்.
செல்வகுமார் புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
