/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜோஹோ நிறுவன நுழைவு தேர்வு ஆதித்யா பள்ளி மாணவர்கள் மூவர் வெற்றி
/
ஜோஹோ நிறுவன நுழைவு தேர்வு ஆதித்யா பள்ளி மாணவர்கள் மூவர் வெற்றி
ஜோஹோ நிறுவன நுழைவு தேர்வு ஆதித்யா பள்ளி மாணவர்கள் மூவர் வெற்றி
ஜோஹோ நிறுவன நுழைவு தேர்வு ஆதித்யா பள்ளி மாணவர்கள் மூவர் வெற்றி
ADDED : பிப் 13, 2024 04:59 AM

புதுச்சேரி: ஜோஹோ நிறுவன நுழைவு தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் மூவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஜோஹோ கார்ப்பரேஷன் இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்ற இந்திய அளவில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வினை நடத்தியது. காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த தேர்வில் புதுச்சேரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி ஆதித்யா பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 5 பேர் இதில் பங்கேற்றனர். எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடந்தது. புதுச்சேரியில் மொத்தம் 12 பேர் தேர்வாகினர். இதில், ஆதித்யா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நந்தனா, பரிதிவாசன், ஜெகன் ஆகிய மூவர் தேர்வாகி, ஜோஹோ நிறுவனத்தில் சேர்வதற்கான வேலை வாய்ப்பு ஒப்பந்த கடிதம் பெற்றனர்.
இந்த நுழைவு தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கும், மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் பணம் வழங்கப்படும். தேர்வான மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஜோஹோ நிறுவனத்தில் வேலை உறுதி செய்து தரப்படும்.
நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களையும், ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி சால்வை அணிவித்து வாழ்த்தினர். பள்ளி முதல்வர், துணை முதல்வர், இயக்குநர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.