UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தொரப்பாடி கருமகாரிய மண்டபம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெரு பக்கிரி மகன் பரசுராமன், 25; மருதவாணன் மகன் மதன், 21; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று, கடலுார், தேவனாம்பட்டிணம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சுனாமி நகர் சுடுகாட்டு அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தேவனாம் பட்டிணம் ஆனந்தன் மகன் ஆகாஷ், 24; என்பவரை கைது செய்தனர். அவர் வைத் திருந்த 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
