தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மொரட்டாண்டி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை

மொரட்டாண்டி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை

மொரட்டாண்டி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை


UPDATED : நவ 13, 2026 08:50 PM

ADDED : நவ 13, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 08:50 PM ADDED : நவ 13, 2026 08:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, 108 லிட்டர் பாலபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.

புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரக பெயர்ச்சிகளின்போது சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

அதன்படி ஒன்னரை ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் நேற்று பிரவேசித்தார்.

அதையொட்டி, கோவிலில் உள்ள ராகு, கேது பகவானுக்கு சிதம்பர கீதாராம் குருக்கள் தலைமையில் 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், அபிேஷக பொடிகள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, நட்சத்திர ராசி பரிகார ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராகு, கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி மகா தீபாராதனை நடந்தது.

விழாவில், கீதா சங்கர குருக்கள், ஆசிரியர் ரமேஷ், அசோக் குருக்கள், மகேஸ்வரி, வித்யா, கீதா மாலதி, கோவில் டிரஸ்டிகள் சொர்ண பிரியா, ஸ்ரீகண்டன், யாதுஷா, அசோக் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us