/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம்பெண் மூலம் ஐ.டி., ஊழியரை மயக்கி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது; நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது அம்பலம்
/
இளம்பெண் மூலம் ஐ.டி., ஊழியரை மயக்கி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது; நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது அம்பலம்
இளம்பெண் மூலம் ஐ.டி., ஊழியரை மயக்கி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது; நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது அம்பலம்
இளம்பெண் மூலம் ஐ.டி., ஊழியரை மயக்கி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது; நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது அம்பலம்
ADDED : ஏப் 24, 2025 12:16 AM

கோட்டக்குப்பம்: புதுச்சேரி அருகே இளம்பெண் மூலம், ஐ.டி., ஊழியரை காம வலையில் விழ வைத்து, நிர்வாண வீடியோ எடுத்து, ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளைஞர், ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண்ணிற்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஒரு இளம்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.
ராங் கால் என கூறி, ஐ.டி. ஊழியர் இணைப்பை துண்டித்தார். மீண்டும் தொடர்பு கொண்ட அந்த இளம்பெண், கொஞ்சும் பாணியில் பேசி, ஐ.டி., ஊழியரை காம வலையில் விழ வைத்தார்.
அதையடுத்து, கடந்த 21ம் தேதி புதுச்சேரி இந்திரா சதுக்கம் அருகே இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, அப்பெண் அழைத்ததன் பேரில், புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பெரியமுதலியார் சாவடி கடற்கரை அருகே பழையபட்டின சாலையில் உள்ள லாட்ஜுக்கு ஐ.டி., ஊழியர் சென்றுள்ளார்.
அங்கு ஒரு அறையில், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கும்பல் அறைக்குள் புகுந்து, ஐ.டி., ஊழியரை மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவை வெளியிடுதாக கூறி, ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டி, கழுத்தில் கத்தியால் கீறினர்.
இளம் பெண் நாடகமாடி, காம வலையில் சிக்க வைத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த வாலிபர் சுதாரித்துக்கொண்டு, அவர்கள் கேட்கும் பணத்தை கொடுப்பதாக கூறினார்.
அதையடுத்து, அந்த கும்பல், வாலிபரின் மொபைல் போன், விலை உயர்ந்த பைக்கை பறித்துக்கொண்டு, வேறொரு வாகனத்தில் அழைத்துச் சென்று, அவரது வீட்டின் அருகே விட்டனர். அதன்பிறகு ஐ.டி., ஊழியர் வீட்டில் இருந்து வெளியே வராததால், கும்பல் தப்பிச் சென்றது.
இது குறித்து ஐ.டி., ஊழியர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த லாட்ஜிக்கு சென்று, லாட்ஜை குத்தகை எடுத்து நடத்தி வந்த மூலக்குளத்தை சேர்ந்த ஜெர்மின் ஆல்வின், 31; என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, மிரட்டி பணம் பறிக்கும் கும்பலில் ஜெர்மின் ஆல்வினும் ஒருவராக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பிரதீப் (எ) சுகன் தலைமையில், மரக்காணம் கூனிமேடு லோகநாதன் மகன் திருநாவுக்கரசு, 24; வில்லியனூர் மணவெளி சுரேஷ் மகன் மோகனபிரசாத், 19; ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடி ஜெயச்சந்திரன் மகன் சுனில், 20; ஆகிய நான்கு பேரும், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மூலம், ஐ.டி., ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரிந்தது.
அதையடுத்து, ஜெர்மின் ஆல்வின், திருநாவுக்கரசு, மோகனபிரசாத், சுனில் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளம்பெண் மற்றும் பிரதீப் சுகன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.