/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ - கார் மோதல் 4 பேர் காயம்
/
ஆட்டோ - கார் மோதல் 4 பேர் காயம்
ADDED : பிப் 07, 2024 11:30 PM
பாகூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 51; சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மாலை 4:00 மணியளவில் கடலுார் சென்ற ஷேர் ஆட்டோவில் ஏறி சென்றார்.
புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற மகேந்திரா சைலோ கார் (பி.ஒய் 01 ஏ.இசட் 1431) எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோவின் பின் பகுதியில் மோதியது.
ஆட்டோவில் பயணம் செய்த வெங்கட்ராமன், கடலுார் மல்லிகா 53; கிருமாம்பாக்கம் அக்ஷயா 23; ஆட்டோ டிரைவர் கடலுார், வரக்கால்பட்டு அன்புதாசன் 42; ஆகியோர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல், வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

