ADDED : ஜூன் 26, 2026 03:30 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1.47 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக மர்ம நபருக்கு ரூ. 78 ஆயிரத்து 414 செலுத்தி ஏமாந்துள்ளார்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவரிடம் 17 ஆயிரம், முத்தியால் பேட்டையை சேர்ந்தவர் 10 ஆயிரத்து 800, முதலியார்பேட்டையை சேர்ந்தவரிடம் 41 ஆயிரத்து 100 என 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 314 இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
