/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயிலில் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது

ADDED : மார் 14, 2024 05:10 AM
புதுச்சேரி : தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை ரயிலில் எடுத்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.
புதுச்சேரியில் கஞ்சா, உள்ளிட்ட போதை பொருட்களால் பல்வேறு குற்றங்கள் சம்பவங்கள் நடந்து வருகிறது. போதை பொருட்களின் விற்பனை தடுக்க போலீசார் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் வழியாக, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை எடுத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, நேற்று ஓதியஞ்சாலை போலீசார், புதுச்சேரி ரயில் நிலையத்தில், நேற்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த சந்தேக நபர்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் 4 நபர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது, தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும், விசாரணை செய்ததில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, லட்சுமண்சிங், 26; பாபுநாத், 31; பிகிசம் டாலி,32; அனுகுராடாலி, 26; எனத் தெரியவந்தது. மேலும் இவர்கள், புதுச்சேரியில் தங்கி, கட்டட வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 80 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது, சிறையில் அடைத்தனர்.