தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு


UPDATED : நவ 04, 2026 11:48 AM

ADDED : நவ 04, 2026 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:48 AM ADDED : நவ 04, 2026 11:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

சென்னையில் இருந்து மதுரை நோக்கி நேஷனல் டிராவல்ஸ் பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை காலை 3:00 மணியளவில் உளுந்துார் பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பயணியர் மாளிகை அருகே திடீரென பஞ்சராகி நின்றது. அப்போது, பின்தொடர்ந்து வந்த அசோக் லேலண்ட் லாரி, ஸ்ரீவரதராஜ் டிராவல்ஸ் பஸ் ஹாலிடே டிராவல்ஸ் பஸ் ஆகியவை அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.

இதில் ஹாலிடே பஸ்சில் பயணித்த சென்னை, தாம்பரத்தை சேர்ந்த பூபதி மகள் திவ்யா, 27; மதுரை, புதுார் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திகேயன், 32; ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ததைத் தொடர்ந்து காலை 4:00 மணியளவில் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us