/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாறுமாறாக ஓடிய கார் மோதி பாரதி பூங்கா அருகே 5 பைக்குகள் சேதம்
/
தாறுமாறாக ஓடிய கார் மோதி பாரதி பூங்கா அருகே 5 பைக்குகள் சேதம்
தாறுமாறாக ஓடிய கார் மோதி பாரதி பூங்கா அருகே 5 பைக்குகள் சேதம்
தாறுமாறாக ஓடிய கார் மோதி பாரதி பூங்கா அருகே 5 பைக்குகள் சேதம்
ADDED : ஜூலை 28, 2025 01:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 5 பைக்குகள் சேதம் அடைந்தன.
புதுச்சேரி கடற்கரை சாலைக்கு வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை பாரதி பூங்கா எதிரே வந்த பி.ஓய் 05 எப் 2668 என்ற பதிவெண் கொண்ட மாருதி சூசுகி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று, திடீரென தாறுமாறாக ஓடியது. அதில், அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 5 பைக்குகள் மீது மோதியுடன், மின்கம்பத்தில் மோதி நின்றது.
மேலும் கார் மோதியதில் படுகாயமடைந்த ராஜவேல் என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவனையில் சேர்த்தனர். தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்தி கார் மற்றும் சேதமடைந்த பைக்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின், கார் ஓட்டிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
காரை ஓட்டி வந்தவர் முதலியார்பேட்டை, ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்த சுஜித்குமார் என்பதும், பாகூர் அரசு ஆரம்ப மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடற்கரை சாலை பாரதி பூங்கா எதிரே நடந்த இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து நடந்தது எப்படி பாகூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டா க்டர் சுஜித்குமார் கூறுகையில், தனது மகனை விளையாட்டு பயிற்சிக்காக அழைத்து வந்தபோது, காரை பாரதி பூங்கா அருகே நிறுத்த முயன்றதாகவும், அப்போது, எதிர்பாரா த விதமாக காரின் பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்து விட்டதாக தெரிவித்தார்.