தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீசாரை தாக்கிய 5 பேர் கைது

போலீசாரை தாக்கிய 5 பேர் கைது

போலீசாரை தாக்கிய 5 பேர் கைது


UPDATED : நவ 10, 2026 10:27 AM

ADDED : நவ 10, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:27 AM ADDED : நவ 10, 2026 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை வழிமறித்து, தாக்கியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மதுபோதையில் சிலர் பைக் ஓட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ரிஷிவந்தியம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சையதுபாஷா, ஜெயராமன், தலைமை காவலர் மணிகண்டன் ஆகியோர் பாவந்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கிருந்த சிலர் போலீசாரை வழிமறித்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, சாத்தப்புத்துாரை சேர்ந்த முத்துலிங்கம் மகன் ஆகாஷ், 24; காமராஜ் மகன் சந்துரு, 24; கோவிந்தன் மகன் பாஸ்கர், 22; பாவந்துாரைச் சேர்ந்த குப்புசாமி மகன் அன்பழகன், 37; பாவாடை மகன் சிவலிங்கம், 46; ஆகிய 5 பேரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us