ADDED : நவ 07, 2026 03:27 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீசார் நேற்று (நவ.,6) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார் ராமாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், 45; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட சேப்ளாநத்தம் சீத்தாராமன் 34; குருவிநத்தம், பெரியார் நகர் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கூத்தப்பாக்கத்தை சேர்ந்த லட்சுமிகுமார் 30; மணமேடு மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட கீழ் அருங்குணத்தை சேர்ந்த அய்யப்பன், 37, ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட பாதிரிக்குப்பத்தை சேர்ந்த கிரி, 21, கிருமாம்பாக்கத்தில் ரகளையில் ஈடுபட்ட குறிஞ்சிப்பாடி கண்ணதாசன் 35; ஆகியோரை கைது செய்தனர்.
