தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொது இடத்தில் ரகளை :9 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை :9 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை :9 பேர் மீது வழக்கு பதிவு


UPDATED : நவ 07, 2026 06:09 PM

ADDED : நவ 07, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 06:09 PM ADDED : நவ 07, 2026 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி நகர் போலீசார் நேற்று (நவ.,6) ஆலங்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திண்டிவனம் ரொட்டிக்கார தெரு பருதி,36; முருகேசன்,29; வில்வநத்தம் ஆறுமுகம்,49, ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று கனகன் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார் ராஜசேகர், 38, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மங்கலகம் போலீசார் நேற்று உறுவையாறு பகுதியில் ரோந்து சென்றனர். சுப்ரமணியர் நகர் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய மங்கலம் வைத்தியலிங்கம் என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

மாகே போலீசார் நேற்று படகு குழாம் அருகே ரோந்து சென்றனர். அங்கு பொது இடத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட, கேரளம், தலசேரி, கோபால்பேட்டா பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ஏனாம் போலீசார் நேற்று பைபாசில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம், உப்பரபேட்டா பகுதியை சேர்ந்த வெங்கடஷ்வரராவ், 32, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us