/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் அதிரடி கைது
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் அதிரடி கைது
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் அதிரடி கைது
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் அதிரடி கைது
ADDED : ஜன 07, 2026 05:26 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ஏர்போர்ட் ரோடு, சாந்தி நகர் சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக. பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், முத்தியால்பேட்டை இஸ்மாயில் மகன் ஷபிக், 29; கருவடிகுப்பம் நிசார்ட் மகன் அர்ஷத், 31; லாஸ்பேட்டை வீரப்பன் மகன் விஜயராஜ், 36, என, தெரியவந்தது.
சோதனையில் பைக் டேங்கில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். 55 ஆயிரம் மதிப்புள்ள 650 கிராம் கஞ்சா, பைக், 12 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கம் மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், முருங்கபாக்கத்தில் கஞ்சா விற்ற முதலியார்பேட்டை சூசைநாதன் மகன் ஜான் பீட்டர், 35; சங்கர் மகன் யோகேஷ், 23; ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள 133 கிராம் கஞ்சா, இரு மொபைல் போன்கள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

