ADDED : ஜன 07, 2026 05:27 AM

புதுச்சேரி: யூகோ வங்கி 84வது, நிறுவன தின விழாவையொட்டி, புதுச்சேரி கிளை சார்பில், மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையொட்டி, யூகோ வங்கி, புதுச்சேரி கிளை மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சார்பில், பொது மருத்துவ முகாம் மற்றும் ஜோதி ஐ.கேர்., கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில், வங்கி வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி யூகோ வங்கி கிளை மேலாளர் ராகுல்குமார் தலைமை தாங்கினார். வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவுடன், யூகோ வங்கி எதிர் காலத்திலும் சிறப்பு சேவைகளை வழங்கும் என, அவர் தெரிவித்தார்.

