தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 6 பேர் கைது

ரகளை செய்த 6 பேர் கைது

ரகளை செய்த 6 பேர் கைது


ADDED : நவ 13, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று (நவ.,12) மீன் மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கோரிமேடு திருவேங்கடம்,37, என்பவரை கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து சென்றனர். மூலகுளம் தனியார் பார் அருகில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ரெட்டியார்பாளையம் சந்திரசேகரன், 42; குண்டுப்பாளையம் அரவிந்த்குமார், 36; மங்கலம் அசோக்,20, ஆகியோரை கைது செய்தனர்.

உருளையன்பேட்டை போலீசார் நேற்று மறைமலையடிகள் சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் பார் அருகில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நைனார்மண்டபம் இளராசு,27, என்பவரை கைது செய்தனர்.

மங்கலம் போலீசார் நேற்று உறுவையாறு மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த சான்றோர்பாளையம் கோவிந்தராசு என்பவரை கைது செய்தனர்.

2 பேர் மீது வழக்கு பதிவு: டி நகர் போலீசார் நேற்று கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட உருளையன்பேட்டை ராகுல்,30; லாஸ்பேட்டை செந்தில்குமார்,36; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us