/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஸ்டேட் பாங்கில் 70வது ஆண்டு பவள விழா
/
புதுச்சேரி ஸ்டேட் பாங்கில் 70வது ஆண்டு பவள விழா
ADDED : ஜூலை 02, 2025 08:12 AM

புதுச்சேரி; பாரத ஸ்டேட் வங்கியின்70ம் ஆண்டு பவள விழா புதுச்சேரி முதன்மை கிளையில் நடந்தது.
உதவி பொது மேலாளருமான அன்புமலர் தலைமை தாங்கினார். வங்கி துணைக் கிளை மேலாளர் ராஜதுரை வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் நளினி பார்த்தசாரதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் முத்து மீனா, தாகூர் கல்லுாரி முன்னாள் முதல்வர் இளங்கோ, புதுச்சேரி அரசு ஓய்வூதியர் சங்கம் நிறுவனர் தாமோதரன், எஸ்.பி.ஐ ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் குமரவேலு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இதில், ஸ்டேட் பாங்கின் சேவைகள் குறித்தும், முதன்மை கிளை ஊழியர்கள் சிறப்பான சேவைகள் குறித்து சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுநிலை உதவியாளர் கார்த்திக் செய்திருந்தார்.
முதன்மை உதவியாளர் முரளிதரன் நன்றி கூறினார்.
70வது ஆண்டை முன்னிட்டு, முதன்மை கிளை உட்பட அனைத்து கிளைகளின் ஊழியர்கள் 30 பேர் கடந்த 27ம் தேதி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.