/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 நாட்களாக தவித்த 8 குடும்பத்தினர் மீட்பு
/
3 நாட்களாக தவித்த 8 குடும்பத்தினர் மீட்பு
ADDED : டிச 04, 2024 05:29 AM
திருபுவனை: திருபுவனை அருகே வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து வெளியே வரமுடியாமல் 3 நாட்களாக சிக்கித் தவித்த 8 குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில்ஓம் சக்தி நகர் உள்ளது.கனமழையால் ஒம்சக்திநகரில் தாழ்வான பகுதிகளில் 8 வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.
தரைதளத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் புகுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் முதல் மாடிக்கு சென்று தங்கி, 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியால் தவித்தனர்.
தகவல் அறிந்த அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தீயணைப்புத் துறையினருடன் படகில் சென்றுவீட்டிற்குள் சிக்கிய குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். மண்ணாடிப்பட்டு கொம்யுன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.