/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவில் 24 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி
/
தேசிய அளவில் 24 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி
தேசிய அளவில் 24 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி
தேசிய அளவில் 24 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி
ADDED : ஜன 30, 2026 05:37 AM

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான 24 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சிவ்ராம் ஆல்வா வாழ்த்தி பேசினார். முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். சென்னை டேட்டா டிராக்ஸ் மனிதவளத் துறை துணைத் தலைவர் பிரமிளா சின்னப்பா கலந்து கொண்டு, 'சமூக மற்றும் தொழில்துறை சவால்களுக்கு நேரடி தீர்வுகளை காண மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும்' என்றார். ஏற்பாடுகளை ஒன் எஸ் இன்போடெக் சொல்யூஷன்ஸ் நிறுவன யோகீஸ்குமார் செய்திருந்தார்.
24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள், தங்களது படைப்பாற்றல், நிரலாக்கத் திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தினர்.
முதல் பரிசாக சையத் அம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம், இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லுாரிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
இதில், பொருளாளர் விமல், டிரஸ்டி சிந்து, டீன் கனிமொழி, இயந்திரவியல் துறை பேராசிரியர் இளம்வழுதி, தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரோசாரியோ கில்மேரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

