/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 30, 2026 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில், தமிழ் துறை சார்பில் விவேகானந்தரின் 163வது பிறந்த நாள் இளைஞர் தின தொடர் நிகழ்ச்சியாக நேற்று போதைபொருள் தடுப்பு மற் றும் விழிப்புணர்வு நடந்தது.
நிகழ்ச்சிக்கு போதைப் பொருள் தடுப்பு எஸ்.பி., சுருதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ் போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ் துறை பேராசிரியர் மாலதி வரவேற்றார். முனைவர் அரங்க முருகையன் நன்றி கூறினார். மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

