/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோதல் சம்பவம் 5 பேர் மீது வழக்கு
/
மோதல் சம்பவம் 5 பேர் மீது வழக்கு
ADDED : மார் 15, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அடுத்த ஆதிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பக்கிரி 61; அவரது சகோதரர் சக்திவேல் 47; இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். தாயை பார்த்து கொள்வது தொடர்பாக சகோதரர்களுள் தகராறு ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அதில், இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பக்கிரி அவரது மகன் அஸ்வின்குமார் ,22; ஆகியோர் மீதும், பக்கிரி கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் அவரது மனைவி வாசுகி மற்றும் உறவினர் சாந்தி ஆகியோர் மீதும் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

