ADDED : செப் 27, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைத்த இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி பொது இடத்தில் பேனர் வைக்க தடை சட்டம் உள்ளது. லாஸ்பேட்டை கங்கையம்மன் கோவில் வீதி, மீன் மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொடுத்த புகாரின், லாஸ்பேட்டை போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிந்தனர்.
அதே போல, இ.சி.ஆரில், போக்குவரத்து இடையூறாக பேனர் வைத்த நபர் மீது, அவ்வழியாக ரோந்து பணி சென்ற, போலீசார் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், டி. நகர் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
