/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டு மாடியில் இறந்த கிடந்த மயில்
/
வீட்டு மாடியில் இறந்த கிடந்த மயில்
ADDED : ஜூலை 07, 2025 01:35 AM

அரியாங்குப்பம்:வீராம்பட்டினம் அருகே வீட்டு மாடியில் இறந்து கிடந்த மயிலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சின்ன வீராம்பட்டினம் சாலை ஓடவெளி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் இவர் நேற்று வீட்டு மாடிக்கு சென்றார். அப்போது, மாடியில், இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. உடன் அவர் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஏட்டு, சக்திவேல் மற்றம் போலீசார் அங்கு சென்று இறந்த கிடந்த மயிலை பார்வையிட்டுனர். பின்னர், வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தை அடுத்து வனத்துறை ஊழியர்கள் இறந்த மயிலை கைப்பற்றினர்.
விசாரணையில் அரியாங்குப்பம் ஆற்று பகுதியில் இருந்து மயில், வந்த போது, மின் கம்பியில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதே பகுதியில், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மயில் ஒன்ற இறந்து கிடந்து குறிப்பிடதக்கது.