/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
ADDED : நவ 08, 2024 05:04 AM
புதுச்சேரி: பூமியான்பேட்டையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பூமியான்பேட்டை பாவாணர் நகர், சமுதாய கூடம் அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் (எ) பொட்டு விஜி, 30; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.