/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணம் நிச்சயித்த பெண் திடீர் மாயம்
/
திருமணம் நிச்சயித்த பெண் திடீர் மாயம்
ADDED : நவ 27, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: திருமணம் நிச்சயித்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த சார்க்காசிமேட்டை சேர்ந்த நர்சிங் பட்டதாரி பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டில் துாங்கிய அந்த பட்டதாரி பெண் மறுநாள் காலையில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை, தனது மகளின் மாஜி காதலன் மீது சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

