ADDED : ஜூன் 24, 2026 01:27 AM
காரைக்கால்: காரைக்காலில் கார் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
செங்கல்பட்டு, பம்மல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் அப்துல் காதர், 51. இவர், நேற்று முன்தினம் நாகூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் தனது எக்ஸ்.யூ.வி. காரில் (டி.என்.12 ஏ.ஏ.3685) சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.காரைக்கால், திருப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதியது.
பைக்கில் வந்த தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, என்பவர் படுகாயமடைந்தார். காரைக்கால் அரசு மருந்துவனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
