ADDED : ஜூன் 24, 2026 01:27 AM
பாகூர்: ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூ., தொகுதி குழு கூட்டம், குடியிருப்புபாளையம் ஆனந்தவள்ளி இல்லத்தில் நடந்தது.
ஆறுமுகம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பெருமாள் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். வேலை அறிக்கை மீதான விவாதத்தில் பக்தவச்சலம், ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, சுமதி, நாராயணசாமி, கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூ., வேட்பாளருக்கு முழு ஆதரவு கொடுத்து வெற்றி பெற செய்வதற்கு ஏம்பலம் தொகுதி முழு முயற்சியில் ஈடுபடும். கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து ஜூலை கடைசி வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் கம்யூ., கட்சி தத்துவார்த்த பயிற்சி முகாமில் பங்கேற்பது உட்பட பலர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மறைந்த இயக்குனர் பாரதிராஜா, சுப்பையா நகர் கிளை மீனாட்சி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
