
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
சாரம் முத்துவிநாயகர், சுப்ர மணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி கிருத்திகையொட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு மகா அபி ேஷகம், தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமே சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பொன் நீலகண்டன் செய்திருந்தார்.