/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர்களின் படங்கள் நீக்கம் அரசு இணையதளத்தில் அதிரடி
/
அமைச்சர்களின் படங்கள் நீக்கம் அரசு இணையதளத்தில் அதிரடி
அமைச்சர்களின் படங்கள் நீக்கம் அரசு இணையதளத்தில் அதிரடி
அமைச்சர்களின் படங்கள் நீக்கம் அரசு இணையதளத்தில் அதிரடி
ADDED : மார் 21, 2024 12:28 AM
புதுச்சேரி : அரசு இணையதளத்தில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசின் அதிகாரபூர்வ இணையதளமாகpy.gov.inஎன்ற இணையதளம் உள்ளது. இதில் அரசு துறைகளின் இணையதளங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு மக்களுக்கான சேவைகள், தவகல்கள் அனைத்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த 16ம் தேதி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புதிதாக நலத்திட்டங்கள் துவங்க தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசு இணையத்தளத்தில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன.
தமிழிசை கவர்னர் பதவியில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், தேர்தல் துறையின் அறிவுறுத்தலின்படி அவருடைய புகைப்படமும் அரசு இணையதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

