/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குனர் வருகை
/
கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குனர் வருகை
ADDED : நவ 23, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடலோர காவல்படை உள்கட்டமைப்பு பணிகளை கூடுதல் தலைமை இயக்குனர் டோனி மைக்கேல் நேற்று பார்வையிட்டார்.
இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மற்றும் வடகிழக்கு கூடுதல் தலைமை இயக்குநர் டோனி மைக்கேல், கிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்ட புதுச்சேரிக்கு நேற்று வந்தார்.
அவரை, புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டஸிலா வரவேற்றார். பின்னர், கூடுதல் தலைமை இயக்குநர் டோனி மைக்கேல், புதுச்சேரியில் உள்ள விமான பிரிவு தளம், கடலோர கண்காணிப்பு மையம் மற்றும் கடலோரக் காவல் படை உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

