/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்கல்
/
ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்கல்
ADDED : நவ 23, 2024 05:32 AM

காரைக்கால் : காரைக்காலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில், பயனாளிகளுக்கு உதவித் தொகையை அமைச்சர் வழங்கினார்.
காரைக்கால், நேரு நகர் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலிவடைந்தோர் தின விழா நடந்தது.
விழாவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் திருமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடு கட்ட மானியம், திருமண உதவித்தொகை, கலப்புத் திருமண ஊக்குவிப்பு தொகை, கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகைகளை வழங்கினார்.
அதேபோன்று, தொடர் நோயாளிக்கு நிதி உதவி, இலவச வேஷ்டி சேலைக்கு நிதி உதவி, தீ விபத்திற்கான நிதி உதவி, இறந்தவர்களின் ஈமச்சடங்கிற்கு நிதி உதவிகள் வழங்கினார்.