/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பறவை, விலங்குகள் வேட்டை தடுக்க ஆலோசனை கூட்டம்
/
பறவை, விலங்குகள் வேட்டை தடுக்க ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 13, 2024 01:07 AM
புதுச்சேரி:தமிழகம், புதுச்சேரி மாநிலங்களால், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில், கடந்த 10ம் தேதி வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள நரி, புனுகுப்பூனை, பழம்தின்னி வவ்வால் உள்ளிட்ட 12 பாலுாட்டிகள் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டன. அத்துடன் இரண்டு கூண்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 75 கிளிகள், உடும்புகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
இரு மாநில பரப்புகளில் ஊசுட்டேரி அமைந்துள்ளதால், வேட்டை கும்பலை கண்காணித்து பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பறவை, விலங்குகளின் இறைச்சியை வாங்குவது தவறு. இந்த இறைச்சியை விற்பதும், வாங்குவதும் சட்டப்படி தவறு. சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
புதுச்சேரி வனப் பாதுகாவலர் அருள்ராஜன் கூறும்போது, ''வேட்டையாடுவதைத் தடுக்க போதிய பணியாளர்கள் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளோம்,'' என்றார்.

