/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அக்ரி கிளினிக் பயிற்சி நிறைவு
/
அக்ரி கிளினிக் பயிற்சி நிறைவு
ADDED : நவ 18, 2025 06:01 AM

புதுச்சேரி: தவளகுப்பம் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தில், அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சியின் நிறைவு விழா நடந்தது.
இந்திய அரசு வேளாண் துறை அமைச்சகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், நபார்டு நிதி உதவியோடு புதுச்சேரி தவளக்குப்பம் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தில் நடந்த 45 நாட்கள் அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சி நிறைவு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் நிறுவனர் அக்ரி கணேஷ் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வெங்கட சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன், இந்தியன் வங்கி தலைமை மாவட்ட மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சத்யா, பாலாஜி, தமிழரசன், நதியா ஆகியோர் செய்திருந்தனர்.
நிறுவனத்தின் ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

