/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரிக்கு இட ஒதுக்கீடு; அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

ADDED : ஆக 23, 2025 04:41 AM

புதுச்சேரி : ஜிப்மர் வேலை வாய்ப்பில், மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை, புதுச்சேரி மாநில இட ஒதுக்கீடாக மத்திய அரசு வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விளக்க ஆலோசனைக் கூட்டம், உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க., உ ள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும். உடனடியாக முஸ்லீம் சமுதாய மக்களின் நலனுக்கான, வக்பு வாரியத்தை அமைத்திட வேண்டும்.
முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான மாதாந்திர ஓய்வதிய திட்டத்தில், சிறுபான்மை மற்றும் அட்டவணை பிரிவை சேர்ந்தவர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஜிப்மர் மருத்துவ நிர்வாகத்தில் அனைத்து வேலை வாய்ப்பிலும் 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை, புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
நோணாங்குப்பம் படகு குழாமில் கூடுதல் படகுகளை இயக்கவும், சிற்றுண்டி கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை செயல்படுத்த விரும்பும் மீனவர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ராஜிவ் சிலை முதல் இந்திரா சிலை வரையிலான மேம்பாலம் பணியை விரைந்து துவங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.