/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., அன்பழகனுக்கு இருதய அறுவை சிகிச்சை
/
அ.தி.மு.க., அன்பழகனுக்கு இருதய அறுவை சிகிச்சை
ADDED : ஆக 26, 2025 07:11 AM
புதுச்சேரி : இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அ.தி.மு.க., மாநில செயலாளர் உடல் நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகனுக்கு 15 ஆண்டிற்கு முன் இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு நேற்று காலை பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.
தகவலறிந்த முதல்வர் ரங்கசாமி, மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அன்பழகனின் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும், அன்பழகன் குடும்பத்தினரிடமும் பேசினார்.