/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்டம்
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஏப் 05, 2025 04:20 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் நுழைவு வாயில் எதிரில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் பணி நிரந்தரம் அல்லது பணி நிரந்தரம் செய்யும்வரை ஊதிய உயர்வு கேட்டு சுகாதாரத்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்னர்.
இந்நிலையில் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க நுழைவு வாயில் எதிரில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்க தலைவர் வாணிதாசன் முன்னிலை வகித்தார். ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

