ADDED : அக் 17, 2026 02:28 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்துார், கல்லடித் தெருவில் உள்ள ரயில் நிலையும் அருகே நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு ஒருவர் மது அருந்திவிட்டு பொது மக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், திருவாரூர் மாவட்டம், நன்னிலம், பாலுார் மேலத் தெருவைச் சேர்ந்த மாதவன் மகன் வீரய்யன், 20, என்பது தெரிய வந்தது. அவர் மீது அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
