/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
/
அனைத்து சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
அனைத்து சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
அனைத்து சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2026 05:44 AM

புதுச்சேரி: சுகாதார ஊழியர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அனைத்து சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை, ஒரு நாள் பணிகளை புறக்கணித்து இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவர் அலுவலகம் எதிரே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார ஊழியர் சங்கங்களின் மத்திய கூட்டமைப்பு தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் பிரபாத் சிறப்புரையாற்றினார். மத்திய கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
மத்திய கூட்டமைப்பின் பொது செயலாளர் லட்சுமணசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தின்போது அரசு விதிகள், அரசு ஆணைகள் அடிப்படையில் நியமன விதிகளை திருத்தம் செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதியக் குழு அடிப்படையில் பணிக்கட்டமைப்பு அமைக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தினால் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, மார்பக நோய் மருத்துவமனை, 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மண்ணாடிப்பட்டு, கரி க்கலாம்பாக்கம் சமுதாய நல வழி மையம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். சாந்தி நன்றி கூறினார்.

