/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஏப் 11, 2025 04:04 AM
புதச்சேரி: ஆலங்குப்பம் அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் 29 ஆண்டுகளுக்கு பிறகு சந்திந்தனர். ஆரோவில் தனியார் இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தங்களுக்கு ஆசிரியர்கள், கல்வி பயிற்றுவித்த விதங்கள் குறித்தும் பகிர்ந்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், பயின்ற பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுதேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பது, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

