/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கப் பெருவிழா துவங்கியது
/
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கப் பெருவிழா துவங்கியது
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கப் பெருவிழா துவங்கியது
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கப் பெருவிழா துவங்கியது
ADDED : அக் 06, 2024 04:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 40ம் ஆண்டு மாணிக்கப் பெருவிழா நேற்று துவங்கியது.
காலையில் நடந்த விழாவில் புதுச்சேரி-கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்த் தலைமையில் 40 அருட்தந்தையர்கள், அருட் கன்னியர்கள் இறையாசீரைப் பெற்று தந்தனர். தொடர்ந்து 40ம் ஆண்டு லோகோவை வெளியிட்டார்.
மாலையில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் லுார்துசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, கலை, அறிவியல் மற்றும் திறன் கண்காட்சியை திறந்து வைத்து, சுவடுகள் நாற்பது குறுந்தகட்டை வெளியிட்டார்.
விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோவா மாநில அரசு செயலர் வல்லவன், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி, இருதய ஆண்டவர் பேராலய அருட்தந்தை பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கண்காட்சியில் கற்காலம் தொடங்கி செயற்கை நுண்ணறிவு காலம் வரை சூரிய குடும்பத்தின் இயக்கம் குறித்த அரங்கம், ரோபோ, பல்கலை அரங்குகள், நாணயங்கள், பாரம்பரிய கேமராக்கள், நேரலை நாடக நிகழ்ச்சிகள், அதிநவீன அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட படைப்புகள் இடம்பெற்றன.
பள்ளியில் இருந்து சென்டாக் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வான 30 மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஸ்டெதஸ்கோப் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்தாண்டு மேல்நிலை தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க மோதிரமும், 90 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிக்காசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
வரும் 8ம் தேதி வரை கண்காட்சியினை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடலாம். 9ம் தேதி விழா நிறைவு பெருகிறது.