/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவிலான போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை
/
தேசிய அளவிலான போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை
ADDED : ஜன 05, 2026 04:27 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளி வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.
மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய அளவிலான இறுதிப் போட்டி, புனே யஷ்வந்த்ராவ் சவான் மேம்பாட்டு நிர்வாக அகாடமியில் நடந்தது. இதில் புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்று பள்ளிக்கும், புதுச்சேரிக்கும் பெருமை சேர்த்தனர்.
கலா உத்சவ் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்து இருபது போட்டியாளர்களை உள்ளடக்கிய 37 அணிகள் பங்கேற்றன.
இவர்கள் 12 மாறுபட்ட கலை வடிவங்களில் போட்டியிட்டனர். இதில், வாத்திய இசைக் குழு பிரிவில், போட்டியிட்ட அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். வெண்கலப் பதக்கம் வென்ற சஞ்சீவ், காயத்ரி, நவீன் கார்த்திகேயன், மோஹ்னிஷ் அடங்கிய குழுவினரை அமலோற்பவம் லுார்து அகாடமியின் நிறுவனர் லுார்துசாமி தலா 6 கிராம் வெள்ளிக் காசுகள் வழங்கி பாராட்டினார்.
அவர் கூறுகையில், 'கலைகளை கல்வியயோடு ஒருங்கிணைத்து வழங்குவதால் இந்த சாதனை ஒரு சான்றாகும். ஒழுக்கம், பக்தி, ஆர்வத்துடன் கூடிய பயிற்சி இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தால், வெற்றி என்பது இயல்பாகவே நம்மை தொடர்ந்து வரும்' என்றார்.

