UPDATED : அக் 31, 2026 07:56 PM
ADDED : அக் 31, 2026 07:54 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் மூன்று இடங்களில் அங்கன்வாடி மைய கட்டடங்களை ரவிக்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
வில்லியனூர் தொகுதி, கொம்பாக்கத்தில் இரு இடங்களிலும், ஒட்டாம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் நோக்கில், கொம்பாக்கம் தண்ணீர் தொட்டி, பிள்ளையார் கோவில் மற்றும் ஒட்டாம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடங்களை ரவிக்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
