/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி
/
அரசு பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி
ADDED : ஏப் 24, 2025 05:18 AM

திருக்கனுார்: வாதானுார், அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா விளையாட்டின் அவசியம் குறித்தும், தீய பழக்கங்களுக்கு செல்லாமல், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தினால், வாழ்க்கையில் முன்னேறலாம் என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்து, விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆளவந்தான், சரவணன் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார்.
ஆசிரியர் ரேணு நன்றி கூறினார்.
இதில், தனிநபர் ஓட்டம், குழு ஓட்டம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், கைப்பந்து, கோ கோ, கபடி, கேரம், இறகுப்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் வேலவன் ஒருங்கிணைத்தார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குமுதா, லட்சுமணன், ப்ளோரன்சியா, சபரிநாதன், விஷ்வ பிரியா, ஸ்ரீமதி, ஓம் சாந்தி, மலர்க்கொடி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

