ADDED : அக் 28, 2026 07:23 PM

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, மாணவர்கள் மாரத்தான் நடந்தது.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 26ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 1ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, நேர்மையே வளமைக்கான வழி என்ற கருத்தை மையப்படுத்தி, மாரத்தான் இன்று (அக்.,28) நடந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சியை, செயலர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இதில், 17 வயதுக்குட்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 5 கி.மீ., துாரத்திற்கு நடந்த ஓட்டப்பந்தயம், கடற்கரை சாலை காந்தி சிலையில் இருந்து துவங்கி, பழைய சாரய ஆலை, ஓட்டல் அதிதி, ராஜா தியேட்டர், கம்பன் கலையரங்கம், ரயில்வே ஸ்டேஷன், டூப்ளக்ஸ் சிலை வழியாக சென்று கடற்கரை சாலையில் நிறைவடைந்தது.
வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும், கலந்த கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
