UPDATED : அக் 29, 2026 12:04 AM
ADDED : அக் 28, 2026 07:20 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவது தொடர்பாக, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களின் கட்டட வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அங்கன்வாடி மையங்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
