தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரதமர் குறித்து அவதுாறு பல்கலை மாணவர்கள் மீது வழக்கு

பிரதமர் குறித்து அவதுாறு பல்கலை மாணவர்கள் மீது வழக்கு

பிரதமர் குறித்து அவதுாறு பல்கலை மாணவர்கள் மீது வழக்கு


UPDATED : அக் 28, 2026 07:23 PM

ADDED : அக் 28, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 07:23 PM ADDED : அக் 28, 2026 07:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் குறித்து அவதுாறாக பல்கலைகழக மதில் சுவற்றில் எழுதிய மாணவர்கள் இருவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேவை மையக் கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் மதில் சுவரில் கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அவதுாறாக சித்தரிக்கும் வகையில் ஸ்பிரே பெயிண்டிங் மூலம் எழுதப்பட்டிருந்தன.

இதனால் ஆவேசமடைந்த ஏ.பி.வி.பி., அமைப்பினர் போராட்டம் நடத்தியதுடன், அவதுாறாக எழுதப்பட்டிருந்த பகுதிகளை கலாய் ஷீட்டுகளால் மறைத்தனர். தொடர்ந்து இது குறித்து பல்கலைகழக பதிவாளிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, எம்.ஏ., பொருளாதாரத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அக்னி அஷிக், எம்.ஸ்சி. இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஹைசம் ஆகியோர் ஸ்பிரே பெயிண்டிங் மூலம் எழுதியது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இருவர் மீதும் பல்கலைகழக பதிவாளர் குணசேகரன் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அக்னி அஷிக், ைஹசம் ஆகியோர் மீது பொது சொத்துகை சேதப்படுத்தியது, குழுக்களுக்கிடையே மோதல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us