உள்தணிக்கை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
உள்தணிக்கை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
UPDATED : அக் 28, 2026 07:48 PM
ADDED : அக் 28, 2026 07:46 PM
புதுச்சேரி: எதிர்கால தணிக்கையாளர் தொழில்நுட்பத்தின் முடிவுகளை கேள்வி கேட்கும் திறனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
இந்திய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மை கணக்காளர் நிறுவனம் மற்றும் புதுச்சேரி செலவுக் கணக்காளர் கிளை சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கில் அவர், பேசியதாவது;
நாம் தற்போது விரைவான பொருளாதா மாற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்று நிறுவனங்கள் நிதி மேலாண்மையை தாண்டிய பல சவால்களை எதிர்கொள்கின்றன. இந்த சூழலில், உள்தணிக்கை புதிய முக்கியத்துவத்தைபெற்றுள்ளது.
நாட்டின் முன்னேற்றம் அது கொண்டுள்ள வளங்களை மட்டும் சார்ந்தது அல்ல. வளங்களை புத்திசாலித்தனமாகவும், திறம்பட பயன்படுத்துவதில் இருக்கிறது. நாட்டின் கட்டமைப்பு என்பது சாலைகள், பாலங்கள், தொழிலகங்கள் மற்றும் பொது உட்கட்டமைப்புகளை உருவாக்குவதுடன் நின்றுவிடுவதில்லை.
மாறாக வலுவான நிறுவனங்கள், வெளிப்படையான அமைப்புகள், பொறுப்புள்ள நிறுவனங்கள் மற்றம் தொழில்முறை காலாசாரத்தை உருவாக்குவதை உள்ளடக்கிறது.
கார்ப்பரேட் நிர்வாகத்தின் அத்தியாவசியத் துாண்களில் உள் தணிக்கையும் ஒன்று. உள் தணிக்கையானது பலவீனங்களை மட்டும் அடையாளம் காணக் கூடாது.
உள்தணிக்கை நம்பகத்தன்மையானது, தணிக்கையாளர்களுக்கு தெரிந்ததை மட்டும் சார்ந்தது அல்ல. அவர்கள் அந்த அறிவை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை சார்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை தணிக்கை வீச்சையும், செயல்திறனையும் மேம்படுத்த உதவி புரிகின்றன.
எதிர்கால தணிக்கையாளர் தொழில்நுட்பத்தின் முடிவுகளை கேள்வி கேட்கும் திறனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உள் தணிக்கை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
