தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவன் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

மாணவன் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

மாணவன் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்


ADDED : செப் 28, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மின் கம்பம் சரிந்து விழுந்து, மாணவன் உயிரிழந்த சம்பவத்தை  கொலை வழக்காக பதிவு செய்திட வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுருத்தி உள்ளது.

இது குறித்து, கவர்னருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது;  புதுச்சேரி கடற்கரை சாலை நவீனப்படுத்துதல், மின் கம்பங்கள் நடுதல், அழகுபடுத்தும் வேலைக்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 27ம் தேதி, கடற்கரை சாலையில், மின்கம்பம் சரிந்து விழுந்ததில் 5 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி, ரயில்வே ஸ்டேஷன் வரையிலான நகர்ப்புறங்களில் பெரும்பாலான இடங்களில் புதை வடக்கேபிள் வசதி இருந்தபோதிலும், பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகளுக்கும், மின்கம்பங்களுக்கும் திறந்த வெளியில், ஆபத்தான முறையில் மின் ஒயர்கள் எடுத்து செல்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில், பழுதடைந்துள்ள அனைத்து மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிட வேண்டும். மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால்,  கடற்கரை சாலையில் மின் கம்பம் சரிந்து விழுந்து, மாணவன் உயிரிழந்த சம்பவத்தை  கொலை வழக்காக பதிவு செய்திட   வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us