ADDED : செப் 28, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் பள்ளி சங்கம் சார்பில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் பள்ளி சங்கம் சார்பில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இ.எஸ்.ஐ.,யில் இருந்து விலக்கு அளிக்கும்படி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரவிடம் மனு அளிக்கப்பட்டது. சங்க தலைவர் ரமேஷ் தலைமையில், சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். மேலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
