/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மகளிர் ஐ.டி.ஐ., யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
/
அரசு மகளிர் ஐ.டி.ஐ., யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
அரசு மகளிர் ஐ.டி.ஐ., யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
அரசு மகளிர் ஐ.டி.ஐ., யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
ADDED : மார் 10, 2026 04:40 AM

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ருக்மணி தலைமை தாங்கினார். இதில், நிலைய ஆசிரியர்கள், பயிற்சி பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நிலைய முதல்வர் ருக்மணி கூறியதாவது:
தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தொழில் பழகுநராக சேர்க்கை செய்திட, புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சுழற்சி முறையில் பிரதம மந்திரி தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேடி, நேற்று நடந்த முகாமில், 8 தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தொழிற்பழகுநரை தேர்வு செய்தனர்.
அதில், 32 பேர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தொழிற்சாலைகளில் சேர்ந்து 12 முதல் 36 மாதங்கள் வரை தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
பழகுநர் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 8 முதல் 12 ஆயிரம் வரை நிறுவனங்களால் வழங்கப்படும் என்றார்.

